பெண்ணின் பாலுறுப்பின் வெளிப்பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ் மேடு எனப் பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை)
பெண் குறி என்பது எலும்பின் மேல் அமைந்த சதைப்பிடிப்பான பகுதி. மேல்புறம் மயிர் வளர்ச்சி கொண்டது. இந்தப் பகுதயில் நிறைய நரம்பு நுனிகள் உள்ளதால் தொடுதலோ,. அழுத்துதலோ ஒரு பெண்ணைக் கிளர்ச்சியுறச் செய்யும்.
வெளி உதடுகள் என்பவை தோல் மடிப்புகள். இவற்றிலும் மயிர் வளர்ச்சி காணப்படும். கிளர்ச்சியுறாத நிலையில் இவை மடிந்திருக்கும். கிளர்ச்சியுற்ற நிலையில் இவை விரிந்து கொடுக்கும். உள் உதடுகள் மடிந்த இதழ்கள் ஆகும்.
நுண்ணிய ரத்தக்குழாய்கள் உள்ள பஞ்சுத்திசுக்கள் இவற்றில் உள்ளன. இவற்றில் மயிர் வளர்ச்சி இல்லை. இவை மன்மத பீட்த்தின் மேற் பகுதியில் இணைகின்றன. அப்படி இணையும் போது மன்மத பீடத்தின் உறை போல விளங்குகின்றன.
வெளிப்புறப்புறுப்பு பெண்ணுக்குப் பெண் மாறுபடும். அளவு, வடிவமைப்பு, நிறம், மென்மை, மயிரின் அடர்த்தி-நிறம், மன்மத பீடத்தின் அளவு., குறியின் நுழைவாயில், கன்னித்தோல் ஆகியவை நாட்டுக்கு நாடு-இனத்துக்கு இனம்- பெண்ணுக்குப் பெண் மாறுபடும். பார்த்தோலின் சுரப்பிகள் எனப்படுபவை உள் உதடுகளில் அமைந்துள்ளன. இவை சுரக்கும் நீர் உதடுகளைப் பளபளப்பாக்குகிறது.
மன்மத பீடம் தான் மிக நுண்ணிய உணர்வு மையம். நுண்ணிய நரம்பு நுனிகள் ஏராளம் இதில் இணைகின்றன. கிளர்ச்சியின் போது ஆணுறுப்பைப் போல இது நீளா விட்டாலும் ஓரளவுக்குப் புடைத்து எழுகிறது. இதற்குக் காரணம் இதில் உள்ள நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது தான்.
இதனைப் பெண்ணின் ஆண்குறி என்கின்றனர். காரணம் இதுவும் ஆண்குறியும் ஒரே விதமான திசுக்களினால் ஆனது. மன்மத பீடத்தின் அளவு பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. அளவில் பெரியதாக இருக்கும் மன்மதபீடம் அதிகமான சுகத்தைத் தரும் என்று நினைப்பது தவறான எண்ணம்.
அதே போல சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணின் மன்மதபீடம் சைஸ் பெரியதாகி விடும் என நினைப்பதும் தவறான எண்ணம். அதே போல மன்மதபீடத்தின் மேலுறையை நீக்கி விட்டால் அதிக சுகம் கிடைக்கும் என நினைப்பதும் தவறு. காரணம் மன்மதபீடம் நேரடியாகத் தொடுவதற்கு ஏற்றதல்ல. உறவின் போது பீடத்தின் மேலுறை உள்ளும் வெளியும், மேலும் கீழும் உராய்வதன் மூலம் கிடைக்கும் இன்பம் அந்த உறையை அகற்றுவதால் கிடைக்காது.
பெரினியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.
கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.
கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம். சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.
பெண் குறியின் உட்பகுதி 45 டிகிரி மேல் நோக்கிச் செல்கிறது. கிளர்ச்சியுறாத நிலையில் அதன் சுவர்கள் சுருங்கியுள்ளன. கிளர்ச்சியின் போது விரிந்து தருகின்றன. குழந்தை பெறாத பெண்ணின் உறுப்பு 8 செ.மீ. நீளம்,. முன் சுவர் 6 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு விரலைக் கெட்டியாகப் பிடிக்கும் அளவு அதன் குறுக்களவு அமையும். குழந்தை பெறும் போது குழந்தையின் தலை வெளியே வரும் அளவு விரிந்து கொடுக்கும். ஆகவே சிறிய ஆண்குறி, பெரிய ஆண்குறி என்னும் வேறுபாடு இதற்கு இல்லை.
என்னதான் சுருங்கிய போதிலும் பெண்குறியின் உட்சுவர் ஆண்குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை வெளியே விடாத வண்ணம் சிறைப்படுத்தும் அளவு வலிமை இல்லாதது. இந்த வல்லமை மிருகங்களில் நாய்க்கு மட்டும் அமைந்துள்ளது. நாயின் பெண் குறியில் இப்படி பூட்டி வைத்துக் கொள்ளும் அமைப்பு உள்ளது.
பெண்குறியின் உட்சுவர்த் தசைகளைச் சுருக்கும் பயிற்சி மூலம் இன்ப உணர்வுகளை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் அதற்கென உள்ள சில பயிற்சிகள் தரப்படுகின்றன. சிறுநீர் கழிக்கும் போது நிறுத்தி நிறுத்திக் கழிப்பது ஒரு பயிற்சி. சும்மா இருக்கும் போது ஆசன வாய்த்தசைகளை இறுக்கியும், தளர்த்தியும் ஒரு பயிற்சி, கெகல் என்று இதனைச் சொல்கின்றனர்.
பெண் குறியின் ஆழத்தில் நுண்ணிய நரம்பு நுனிகள் இல்லை. எல்லா நுனிகளும் நுழை வாயில் அருகிலேயே உள்ளன. உட் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு ஆழம் உணர்ச்சியை உணர வல்லது இல்லை. எனவே தான் சிறிய ஆண்குறி பெரிய ஆண்குறி என்ற வேறுபாடு பெண்குறிக்கு இல்லை என்கின்றனர்.
கருப்பையின் அடிப்பகுதி செர்விக்ஸ் எனப் படுகிறது. குறியின் நுழை வாயிலின் வழியே பார்த்தால் செர்விக்ஸ் ஒரு மென்மையான வெளிர் சிவப்புப் பட்டன் போலத் தோற்றமளிக்கும். உடலுறவின் போது இதன் வழியாகத்தான் ஆணிடமிருந்து வெளிப்படும் விந்தணுக்கள் கருப்பையை அடைகின்றன. தவிர மாதவிடாயின் போது வெளிப்படும் கழிவு ரத்தமும் வெளியே வருவதும் இதன் வழியாகத்தான்.
கருப்பையில் முட்டைகள் உருவாகி வெளி வரும் நேரத்தில் செர்விக்ஸ் வடிக்கும் நீர் நீர்த்திருக்கும். பிற நேரங்களில் கெட்டியாக இருக்கும். ஒரு வழ வழப்பான திரையை ஏற்படுத்தி செர்விக்ஸ் வாயிலை மூடும் அமைப்பு அது. செர்விக்ஸ் உணர்வலைகள் ஏற்படுவது இல்லை. அதனை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப் படுத்தினாலும் பாலுணர்வு கெடுவது கிடையாது.
கருப்பை (யூட்டரஸ்) ஒரு உள்ளீடற்ற உறுப்பு. ஏழரை செ.மீ. நீளம். 5 செ.மீ.அகலம் இருக்கும். மாதவிடாயின் போது அதன் உள்சுவர் மாறுதல் அடைகிறது. உள் சுவரில்தான் கருவான முட்டை ஒட்டிக் கொண்டிருக்கும். உட்சுவரின் தசைகள் பிரசவக் காலத்தில் குழந்தையை வெளியே தள்ளுவதற்கு உதவுகின்றன.
கருத்தரிக்கும் காலத்தில் சுரக்கும் நீர் தான் கருப்பையின் வேலைகளைச் செய்வதற்கு உதவியாக உள்ளன. அடி வயிற்றின் உள்ளே கருப்பை மற்ற உறுப்புக்களின் மீது அழுத்தாமல் தொங்கிய வண்ணம் உள்ளது. சாதாரணமாக கருப்பை பெண்குறிக் கால்வாய்க்கு நேர் கோணத்தில் அமைந்திருக்கிறது.
பலோபியன் குழாய்கள் அல்லது முட்டை நாளங்கள் கருப்பையில் தொடங்கி 10 செ.மீ. நீளத்தில் இருபுறமும் புனல் போன்ற வடிவத்தில் நீண்டிருக்கும். இந்தக் குழாய்களே அருகில் உள்ள கருக்கலங்கள் வெளியிடும் முட்டைகளைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன. ஆணின் விந்தணுக்கள் பெண்குறியின் உள்ளே பீச்சப்பட்டதும் அவற்றுள் ஒன்று முட்டையுடன் சேர்ந்து சினையாக இவை உதவியாக இருக்கின்றன.
பெண் குழந்தை பிறக்கும் முன்பாகவே அதன் கருப்பையில் எதிர்கால முட்டைகள் உருவாகத் தொடங்கி விடுகின்றன. 60 அல்லது 70 லட்சம் எதிர்கால முட்டைகள் குழந்தை பிறப்பதற்கு முன்பே அழுகி வீணாக விடுகின்றன.
புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் கருப்பையில் 4 லட்சம் முட்டைகள் இருக்கின்றன. அதன் பிறகு புதிய முட்டைகள் உருவாவதில்லை. போகப்போக அந்தப் பெண் வளர வளர அவற்றுள் ஏராளமானவை அழுக ஆரம்பிக்கின்றன. பெண் பருவம் அடைந்ததும் மாதவிலக்குத் தோன்றுகிறது
very interesting subject, to know about the human sexology
ReplyDeleteஅருமையான தகவல்,
ReplyDeleteநன்றி.
very good sex education
ReplyDeleteThanks for Your Usefull information
hi gud information to all
ReplyDelete